உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான, வளமான எதிர்காலம் – மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்.!!!

இலங்கையில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் மற்றும் பராமரிப்பாளருக்கும் பாதுகாப்பானதும் வளமானதுமான எதிர்காலத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

ஸ்பெயினின் மெட்ரிட் நகரில் கடந்த 16ஆம் திகதி நடைபெற்ற “சர்வதேச பராமரிப்பாளர் மாநாடு 2026” (Global Caregiver Forum 2026) நிகழ்வின் “எதிர்கால நோக்கு மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள்” (Looking Forward and Next Steps) எனும் அமர்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த உரையின் போது, அண்மையில் ஏற்பட்ட ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இலங்கை வெளிப்படுத்திய மனிதாபிமான அக்கறை மற்றும் அரவணைப்பு குறித்து அமைச்சர் உலக அரங்கிற்கு எடுத்துரைத்தார்.

பராமரிப்பு என்பது தனிநபர் ஒருவரின் சுமை அல்ல; அது அரசாங்கமும் சமூகமும் இணைந்து ஏற்க வேண்டிய கூட்டுப் பொறுப்பு எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

அரசாங்கத்தின் “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற கொள்கைப் பிரகடனத்தின் கீழ், “பாதுகாப்பான சிறுவர் உலகம் – ஆக்கபூர்வமான எதிர்கால சந்ததி” என்ற தூரநோக்கிற்கு அமைவாக, ஆரம்பகால சிறுவர் மேம்பாடு மற்றும் பராமரிப்பு தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் அவர் விளக்கமளித்தார்.

அதன்படி, முன்பிள்ளைப் பருவத்தை இலக்காகக் கொண்டு சிறுவர் ஆரோக்கியத்தை மேம்படுத்த அறிமுகப்படுத்தப்பட்ட “ஸ்டெப்-அப்” (Step-Up) தொடர்பாடல் திட்டம், 2027 ஆம் ஆண்டளவில் தீவு முழுவதிலும் உள்ள அனைத்து முன்பள்ளி மாணவர்களுக்கும் பொதுவான பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துதல், 19,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி வழங்குதல் ஆகியவை முக்கிய நடவடிக்கைகளாக குறிப்பிடப்பட்டன.

மேலும், 2025 – 2029 காலப்பகுதிக்கான முன்பிள்ளைப்பருவ சிறுவர் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டிற்கான தேசிய பல்துறை மூலோபாய செயல் திட்டம், ஒட்டிசம் உள்ளிட்ட நரம்பு மண்டல குறைபாடுகள் கொண்ட சிறுவர்களுக்காக மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஐந்து ஆண்டு திட்டம் பற்றியும் அமைச்சர் எடுத்துரைத்தார்.

இலங்கையில் ‘பராமரிப்பாளர்’ (Caregiver) என்பவரை வெறும் ஒரு உதவியாளராக மட்டும் பார்க்காமல், சான்றிதழ் பெற்ற தொழில் வல்லுநராக உருவாக்குவதே அரசாங்கத்தின் இலக்காகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

உலகின் வெற்றிகரமான அனுபவங்களை தேசிய கொள்கைகளுடன் இணைத்து, இலங்கையின் ஒவ்வொரு குழந்தைக்கும் மற்றும் பராமரிப்பாளருக்கும் பாதுகாப்பான, வளமான எதிர்காலத்தை உருவாக்குவதே தமது உறுதியான நோக்கம் என அமைச்சர் இந்த சர்வதேச மாநாட்டில் மீண்டும் வலியுறுத்தினார்.

இந்த மாநாட்டில் கசகஸ்தான் சுகாதார பிரதி அமைச்சர் திருமதி அலியா ருஸ்டெமோவா, Triple Positive Parenting Programme தலைமை நிர்வாக அதிகாரி திரு. மெட் பட்டர்ரி, போர்த்துக்கல் போவிஸ்டா பயிற்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் பணிப்பாளர் திருமதி கதரினா மாகல்ஹேஸ், அயர்லாந்து குடும்ப வள மைய தேசிய மன்றத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. பெர்கல் லேண்டி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 703714

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time