உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்; சடலமாக மீட்பு – வாழைச்சேனையில் சம்பவம்.!!!

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தார்.

மரணமடைந்த நபரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை (29) இரவு வாழைச்சேனை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த 24 ஆம் திகதி வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க மூன்று பேருடன் சென்ற மீனவர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மீன் பிடித்துக் கொண்டிருந்த போது வலையில் சிக்கிய கொப்புரு மீனை இயந்திரப் படகில் ஏற்றுவதக்கு முயற்சித்த போது மீனின் கொம்பு வயிற்றுப் பகுதியில் குத்தி அவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த நபரை ஏனைய மீனவர்கள் கரைக்கு கொண்டு வரும் போதே உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் பிறைந்துறைச்சேனை பகுதியை பிறப்பிடமாகவும், பாலைநகர் பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட 47 வயதுடைய மீரா லெப்பை சஹாப்தீன் என்பவராவார்.

மரணமடைந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 714017

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time