அதிசயம் ஆனால் உண்மை; தினமும் இரண்டு முட்டைகள் இடும் கோழி.!!!
(ஜே.கே)
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாலமுனை பிரதேசத்தில் தினமும் இரண்டு முட்டைகள் இடும் கோழி, கோழிக் கடையொன்றிலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளது.
பாலமுனை கூட்டுறவு சங்கத்திற்கு முன்னால் உள்ள கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடையிலேயே குறித்த கோழி அடையாளம் காணப்பட்டுள்ளது.
பாலமுனையைச் சேர்ந்த சேர்ந்த முகம்மது அஸ்மான் என்பவர் நடத்தி வருகின்ற கோழிக் கடையில் குருநாகல் பிரதேசத்திலிருந்து அண்மையில் எடுத்துவரப்பட்ட சிவப்பு நிறக் கோழியே தொடர்ச்சியாக 6 நாட்களும் 12 முட்டைகளை விட்டு அதிசயிக்க வைத்துள்ளது.
ஐந்து நாட்களாக தினமும் 10 முட்டைகளை தான் எடுத்ததாகவும் இன்று குறித்த கோழியை தாளங்குடாவைச் சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்து அவற்றை அறுத்தபின் அதன் வயிற்றுக்குள் இருந்தும் இரண்டு முட்டைகளை தான் எடுத்ததாகவும் கடை உரிமையாளரான முகமது அஸ்மான் தெரிவிக்கிறார்.
மிக நீண்ட நாட்களாக கோழி வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் நான் இப்போதுதான் முதன் முதலாக இவ்வாறு இரண்டு முட்டைகளை இடுகின்ற கோழியை கண்டுள்ளதாகவும் அவர் வியப்புடன் தெரிவித்தார்.


