மட்டக்களப்பு விமான நிலையம் முழுமையாக அபிவிருத்தி செய்யப்படும்; சிவில் விமான சேவைகள் அதிகார சபை தலைவர்.!!!
(ஜே.கே)
மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு சிவில் விமான சேவைகள் அதிகார சபை தலைவர் சுனில் ஜெயரட்ண அதிகார சபை உயர்மட்ட அதிகாரிகளுடன் நேற்று (06) மாலை நேரடி விஜயம் செய்தார்.
விமான நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட அவர் மட்டக்களப்பு விமான நிலைய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தினார்.
விமான நிலையத்தின் ஓடுபாதை மற்றும் கட்டுப்பாட்டு பிரிவு,உட்பட விமான நிலையத்தின் முக்கிய இடங்களையூம் குழுவினருடன் பார்வையிட்டார்.
இங்கு கருத்து தெரிவித்த சிவில் விமான சேவைகள் அதிகார சபை தலைவர் “மட்டக்களப்பு விமான நிலையம் முக்கிய விமான நிலையமாகும். அதனை அபிவிருத்தி செய்வதி அரசாங்கத்தின் கடமையாகும்.அமைச்சர் விமல் ரத்னாயகாவின் வழிகாட்டலில் இவ்வாறான நிலையம் முழுமையாக அபிவிருத்தி செய்யப்படும்.என தெரிவித்தார்.







