மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக வறட்சி காரணமாக; குளங்கள் வற்றுவதால் – மீனவர்கள் தொழிலின்றி அவதி.!!!
(ஜே.கே)
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் கடுமையான வறட்சி காரணமாக நீரோடைகள், சிறிய குளங்கள் என்பன முற்றாக வற்றி வருகின்றன. இதனால் குளத்து மீனவர்கள் தொழிலின்றி பல்வேறு விதமான அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இம் மாவட்டத்தில் என்றுமில்லாதவாறு இம்முறை அதிகமான வறட்சியான காலநிலை காணப்படுகிறது. இதனால் கடும் உஷ்ணமான காலநிலை நிலவுவதால் குழந்தைகளும், முதியோர்களும் வெளியே வர முடியாது பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். பல்வேறு நோய்களுக்கும் முகம் கொடுக்க வேண்டி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளியில் வராமையினால் வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றது .
குளங்கள் வற்றி வருவதால் மீனவர்களள் தொழிலுக்காக வாவியை நோக்கி மீன்பிடித் தொழிலுக்காக வருகின்றனர். வாவியிலும் மீன்கள் பிடிபடாமையால் மீனவர்கள் பாரிய தொழிலின்மையை எதிர்கொண்டுள்ளனர்.