உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

October 14, 2026

Hot News

IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!
IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!

Share :

இலங்கை மின்சார சபைக்கு 2ஆம் காலாண்டில்; 5.3 பில்லியன் இலாபம் – 6 மாதங்களில் 13 பில்லியன் இழப்பு.!!!

கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த இந்த வருடத்தின் இரண்டாவது காலாண்டில் 5.31 பில்லியன் ரூபாய் லாபம் ஈட்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

எனினும், கடந்த ஆண்டு இதே காலாண்டில் இலங்கை மின்சார சபைக்கு 34 பில்லியன் ரூபாய் இலாபம் கிடைத்திருந்தது.

இரண்டு முறை மின்சார கட்டணக் குறைப்புகளுக்குப் பின்னர் இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய,கடந்த வருடத்தின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் இரண்டாவது காலாண்டில் வருவாய் 33 சதவீதம் குறைந்து 98 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் செலவுகள் சுமார் 92 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது.

இருப்பினும், இந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது, இரண்டாவது காலாண்டு வருமானம் முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது.

அதற்கமைய, வருவாய் 93 பில்லியன் ரூபாவிலிருந்து 98 பில்லியன் ரூபாயாக உயர்ந்தது.

மேலும் செலவுகள் 112 பில்லியன் ரூபாவியிலிருந்து இருந்து 92 பில்லியன் ரூபாவாகக் கடுமையாகக் குறைந்தது.

இதனிடையே, 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கு, இலங்கை மின்சார சபை 13.1 பில்லியன் ரூபாய் இழப்பைப் பதிவு செய்துள்ளது.

விசேடமாக மார்ச் மாதத்தில் ஏற்பட்ட பெரும் இழப்புகள் இதில் தாக்கம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1230647

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time