உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும்; பாரிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கை.!!!

(ஜே.கே)

சுகாதார அமைச்சு பிரகடனப்படுத்தி உள்ள தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் பாரிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் இ உதயகுமார் தெரிவித்தார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட நாவற்குடா  பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவில் இன்று முழு நாளும் 469 வீடுகளில் பாரிய சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 40 வீடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது டன்,ஒரு வீட்டு உரிமையாளர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ்.முரளீஸ்வரனின் பணிபுரையின் கீழ் காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் இ.உதயகுமாயர் தலைமையில் மாவட்டத்திலுள்ள 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் உள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்கள் 40 பேர் அழைக்கப்பட்டு 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, முப்படையினர் , பொலிசார் பிரதேசத்தில் உள்ள தொண்டர் நிறுவனங்கள் நகர சபை மற்றும் பொது நிறுவனங்களில் உதவியுடன் பாரிய பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 714100

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time