மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் காற்று; கரையோர பிரதேசங்களில் பாதிப்பு.!!!
(ஜே.கே)
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (19) காலை முதல் கடும் காற்று வீசி வருகிறது. இதனால் கரையோர பிரதேசங்கள் மற்றும் வாவி பிரதேசங்களில் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
காத்தான்குடி மற்றும் புதிய காத்தான்குடி பிரதேசங்களில் கடும் காற்று காரணமாக பல இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
காத்தான்குடி கரையோர பிரதேசத்தில் உள்ள மீன் வாடிகளிலும் கூரைகள் காற்றினால் அள்ளுண்டு சொல்லப்பட்டுள்ளதுடன் தகரங்களும் காற்றினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
இதேவேளை காத்தான்குடி வாவி கரையோரத்திலும் கடுமையான காற்று வீசி வருவதினால் வாவியோரத்தில் வசிக்கும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
காற்று காரணமாக துவிச்சக்கர வண்டிகளை செலுத்த முடியாமலும் வெளியில் நடமாட முடியாமலும் சிறுவர்களும் மற்றும் வயோதிபர்களும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது