உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 25, 2026

Hot News

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களின் – வேட்பாளர்களின் விவரம்.!!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 118வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் 17 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் 101 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்புத் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஷ்ரீனா முரளிதரன் தெரிவித்தார்.

கோறனைப்பற்று வடக்கு பிரதேச சபையில் சர்வஜன அதிகாரம் மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஏராவூர் பற்று பிரதேச சபையில் விநாயகமூர்த்தி விஜயராஜா தலைமையிலான சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் தேசிய மக்கள் சக்தியின் அப்துல் வஹாப் முஹம்மட் உசேன் என்பவரின் பெயர் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் நகர சபையில் 11 வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் 9 வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது

போரதீவுப்பற்று பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது அகில இலங்கை தமிழ் காங்கிரசின் ஒளிர்வலசுதன் மற்றும் அவசரத்தினம் சப்தசபகீர்த் ஆகியோரின் பெயர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது

மட்டக்களப்பு மாநகர சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம், காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி, பொதுஜன ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதோடு ஐக்கிய மக்கள் சக்தியின் கருணாநிதி டல்சிகா என்பவரின் பெயர் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மண்முனை பற்று பிரதேச சபையில் முஸ்லிம் காங்கிரஸின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதோடு சோமசுந்தரம் மகேந்திரலிங்கம் தலைமையிலான சுயேட்சை குழு கிருஷ்ணபிள்ளை ஜிஜானன் தலைமையிலான சுயேச்சை குழு செல்லத்துரை தங்கவேல் தலைமையிலான சுயேட்சை குழு ஸ்ரீலங்கா தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட ஐந்து கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதோடு நல்லதம்பி சுரேந்திரன் தலைமையிலான சுயேட்சை குழுவில் திலகநிதி சுரேந்திரன், குணசுந்தரம் திவாகர், மற்றும் வடிவேல் பவளக்கொடி ஆகியோரின் பெயர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கோறளைப்பற்று பிரதேச சபையில் விமலசேன லவக்குமார் தலைமையிலான சுயேச்சை குழு குணரத்தினம் சுரேந்திரன் தலைமையிலான சுயேட்சை குழு ஆகிய சுயேட்சை குழுக்களின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் செல்லத்தம்பி விமல்ராஜ் என்பவரின் பெயர் நிராகரிக்கப்பட்டுள்ளது

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையில் 11 வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

காத்தான்குடி நகர சபையில் சர்வஜன அதிகாரம் கட்சியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது

மண்முனை மேற்கு பிரதேச சபையில் 7 வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது

மண்முனை தென்மேற்கு பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 718820

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time