மட்டக்கப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு இதுவரை 30 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர் – மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எம்.பீ.எம். சுபியான்.!!!
(ஜே.கே)
மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 உள்ளுராட்சி மன்றங்களின் 144 வட்டாரங்களில் இருந்து 146 பேர் தெரிவு செய்வதற்காக இன்றுவரை அரசியல்கட்சி, சுயேச்சைக்குழுக்கள் உட்பட 30 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எம்.பீ.எம். சுபியான் தெரிவித்தார்.
மாவட்ட தேர்தல் ஆணையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் போது அவர் இவ்வாறு 2025 ம் ஆண்டு உள்ளுராட்சி தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல பணிகளையும் ஆரம்பித்துள்ளோம் இம்முறை வாக்களிக்க 4 இலச்சத்து 85 ஆயிரத்து 520 பேர் தகுதி பெற்றுள்ளதுடன் 404 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்கவுள்ளனர்.
இந்த தேர்தலுக்கான வேட்பு மனு கோரிக்கை தேர்தல் திணைக்கள ஆணையத்தால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய எமது மாவட்டத்தில் கடந்த 2025 ம் ஆண்டு மாச் மாதம் 3ம் திகதி ஒவ்வொரு உள்ளுராட்சி மன்றங்களிலும் நோட்டிஸ் வெளியிடப்பட்டது அதன் பிரகாரம் மாச் மாதம் 3 ம் திகதியில் இருந்து மாச் 19 ம் திகதி பகல் 12.00 மணிவரை அரசியல்கட்சிகள் சுயேச்சைக்குழுக்கள் கட்டுப்பணத்தை தேர்தல் அலுவலகத்தில் செலுத்தமுடியும்.
அதேவேளை உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனு மார்ச் மாதம் 17 ம் திகதி தொடக்கம் 20 ம் திகதி நண்பகல் 12.00 மணிவரை மட்டக்களப்பு பழைய மாவட்ட அரசாங்க காரியாலயத்தில் ஏற்றுக் கொள்ளப்படும்.
மட்டக்களப்பு மாநகரசபையில் 20 வட்டாரங்களில் இருந்தும் மேலதிக உறுப்பினர்களில் இருந்தும் 33 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் இதில் 60 வாக்களிப்பு நிலையங்களில் 70 ஆயிரத்து 24 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். ஏறாவூர் நகரசபையில் 16 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 20 ஆயிரத்து 561 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.