உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 24, 2026

Hot News

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் மலேரியா அச்சுறுத்தல்.!!!

மீண்டும் எமது பிரதேசங்களில் மலேரியா காய்ச்சல் தொற்றும் ஆபத்துள்ளமையால் காய்ச்சல் இருப்பின், மலேரியா பரிசோதனை செய்து கொள்வது கட்டாயமாகும்.

அத்துடன் மலேரியா உள்ள நாடுகளுக்கு பயணத்தை மேற்கொள்ள முன்னர் மலேரியா தடுப்பு மாத்திரைகளைப் பெற்றுச்செல்லுங்கள்.

மாத்திரைகளை பொதுச்சுகாதார வெளிக்கள உத்தியோகத்தர்களைத் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும்.

இந்தியா, இந்தோனேசியா, மலேஷியா, பாகிஸ்தான், தாய்லாந்து, தென்னாப்பிரிக்கா, தென்கொரியா, பங்களாதேஷ், நைஜீரியா போன்ற நாடுகளுக்கு செல்லவிருந்தால் ஒரு வாரத்திற்கு முன்பு உமது பிராந்திய மலேரியா தடை இயக்க அலுவலகத்தில் அல்லது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமை புரியும் பொதுச்சுகாதார வெளிக்கள உத்தியோகத்தர்களைத் தொடர்பு கொண்டு மலேரியா தடுப்பு மாத்திரைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இக்குறித்த நாடுகளிலிருந்து திரும்பியதும் உங்கள் பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலையில் இலவசமாக குருதிப்பரிசோதனை மேற்கொண்டு உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் எமது நாட்டையும் மலேரியா காய்ச்சலிருந்து காப்பாற்றுவோம்.

வருடமொன்றிற்கு சுமார் 40 -50 மலேரியா நோயாளிகள் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த பின் இனங்காணப்படுகின்றனர்.

அவர்கள் உரிய காலத்தினுள் சிகிச்சையளிக்கப்படுவதால் எமது நாட்டைல் பாதுகாத்து வருகின்றோம்.

மலேரியா தொடர்பான இவ்விழிப்புணர்வை நாமும் பகிர்வதோடு, இதற்கான ஒத்துழைப்பையும் வழங்குவோம்.

தொடர்புகளுக்கு :

RMO Office : 0652225983

RSPHFO : 0729005603 / 0770698766

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 718666

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time