உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

மட்டு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்; காவத்தமுனைக்கு விஜயம்.!!!

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எம்.தாஜுதீன் அவர்களின் அழைப்பின் பேரில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்று (15) காவத்தமுனைக்கு விஜயம் செய்து பிரதேச அபிவிருத்தி தொடர்பில் ஆராய்ந்தார்.

இதன் போது காவத்தமுனை விளையாட்டு மைதானம், சிறுவர் பூங்கா போன்றவற்றைப் பார்வையிட்டு குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன், அதனை நிவர்த்தி செய்து தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.

இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வுடன், தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ், முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத்தொகுதி அமைப்பாளர் ஹபீப் றிபான், பிரதேச சபை உறுப்பினர் எம்.தாஜுதீன் மற்றும் பிரதேச இளைஞர்கள், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

– ஊடகப்பிரிவு

Related News

Total Websites Views

Total Views: 258991

Search

விளம்பரங்கள்