உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 25, 2026

Hot News

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய பிரதி பொலிஸ்மா அதிபர் கடமையேற்பு.!!!

(ஜே.கே)

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய பொலிஸ்மா அதிபராக நியமனம் பெற்றுள்ள நுவன் மெண்டிஸ் இன்று காலை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் காரிய வளாகத்தில் இடம்பெற்ற அணிவகுப்பு மரியாதை தொடர்ந்து பிரதி பொலிஸ்மா அதிபர் தமது கடமைகளை பொறுப்பேற்றார் .

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியாச்சகர் லலித் லீலிரத்னவின் தலைமையில் இடம்பெற்ற இப்பதவி ஏற்பு நிகழ்வில் மாவட்டத்தின் 15 பொலிஸ் நிலையங்களினதும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியாச்சகர்கள்,உட்பட மாவட்டத்தின் பிரதான பொலிஸ் அதிகாரிகளும் பங்கெடுத்திருந்தனர்

மாவட்டத்தின் பிரதி பொலிஸ்மா அதிபராக கடமை புரிந்த ஜகத் நிசாந்த இடமாற்றம் பெற்றுச் சென்றதைத் தொடர்ந்து புதிய பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது

பௌத்த இந்து இஸ்லாமிய கிறிஸ்தவ சர்வ மத ஆசீர்வாதங்களைத் தொடர்ந்து புதிய பொலிஸ்மா அதிபர் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது சர்வ மத தலைவர்களின் ஆசி உரைகளும் இடம் பெற்றன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 718869

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time