மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில்; பொலிசாருக்கான அரையாண்டு பரிசோதனை.!!!
(ஜே.கே)
மட்டக்களப்பு தலைமையாக பொலிஸ் நிலைய பொலிசாருக்கான அரையாண்டு பரிசோதனை மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்ன தலைமையில் இன்று மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது
தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதவி பொலிஸ அதிகாரி உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்கள் அரையாண்டு பொலிஸ் பரிசோதனையில் பங்கு கொண்டனர்.
பொலிசார் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் பொலிஸ் வாகனங்கள் கட்டிடங்கள் என்பனவும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
பொலிசாரின் அணிவகுப்பு மரியாதையும் இடம்பெற்றது.