உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 25, 2026

Hot News

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

30 வருட காலமாக அர்ப்பணிப்புடன் செயலாற்றிய; மட்டு மாவட்ட ஊடகவியலாளர்கள் கெளரவிப்பு.!!!

(எம்.ரி.எம்.யூனுஸ்)

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு அரச தகவல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக ஒழுக்க நெறிக்கோவை மற்றும் ஊடக கையாளுகை தொடர்பில் தெளிவூட்டும் செயலமர்வும், மூத்த ஊடகவியலாளர்கள் கெளரவிப்பு நிகழ்வும் நேற்று (27) மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு அதிதியாக அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. ஹர்ஷ பண்டார, தகவல் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் சுமித் திலகரட்ன, மாவட்ட தகவல் பொறுப்பதிகாரி வீ. ஜீவானந்தம் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

இதன் போது சமூக ஊடகப் பயண்பாடு மற்றும் ஒழுக்கம் தொடர்பில் விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பீ.எம்.பைரூஸ் , கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டம் தொடர்பாக மொரவவ பிரதேச செயலாளர் நவேஸ்வரன் ஆகியோர் விரிவுரை வழங்கினர்.

30 வருட காலமாக மட்டக்கனப்பு மாவட்டத்தில் ஊடகப்பணியினை சிறப்பாக செய்து வருகின்ற 10 சிரேஷ்ட ஊடகவியலாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்னர்.

குறித்த செயலமர்வில் புதிய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம், தேசிய அபிவிருத்தி மற்றும் வரவு செலவுத் திட்டம் தொடர்பிலான விளக்கங்களும், தெளிவூட்டல்களும் அரச தகவல் திணைகள பணிப்பாளரினால் ஊடகவியலாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 718943

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time