உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

August 12, 2025

Hot News

மட்டு – கல்முனை பிரதான வீதியில் மின்கம்பத்தில் மோதிய டிப்பர்; பல நூறு வீடுகள் இருளில்.!!!

(ஜே.கே)

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் செட்டிபாளையத்தில் வேகக்கட்டுபாட்டை இழந்த பாரமேற்றிய டிப்பர் வாகனமொன்று மின்கம்பங்களில் மோதியதில் மின்கம்பங்கள் உடைந்து நெருங்கியுள்ளதுடன் பல நூறு வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் மட்டக்களப்பு செட்டிபாளையம் பிரதான இச்சம்பவம் பதிவாகியுள்ளது.

மட்டக்களப்பு கல்முனை பிரதான சாலை வழியே சம்மாந்துறையில் இருந்து தகர பீப்பாய்களின் வெட்டப்பட்ட தகடுகளை ஏற்றிக்கொண்டு கொழும்பு நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனமே செட்டிபாளையத்தில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வீதியோரமிருந்த மின்சாரத் தூணுடன் மோதியுள்ளது.

விபத்து சம்பவிக்கும் போது டிப்பரில் சாரதியும் உதவியாளரும் பயணித்துள்ள நிலையில் தெய்வாதினமாக எவருக்கும் எதுவித ஆபத்தும் ஏற்படவில்லை. டிப்பரின் முன்பகுதி பெருமளவில் சேதமடைந்துள்ளது.

விபத்து தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிஸார் முன்னெடுக்கின்றனர்.

குறித்த டிப்பர் வாகனம் காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என பொலிசார் தெரிவித்தனர்.

Related News

Total Websites Views

Total Views: 310834

Search

விளம்பரங்கள்