உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

மட்டு வாவியில் கழிவுகள் உட்புகுவதை தடுக்க; தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் – தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள் ஆரம்பம்.!!!

(ஜே.கே)

இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய வாவியான மட்டக்களப்பு வாவியிவில் வீதியில் உள்ள கழிவுகள் மற்றும் மண் என்பன வாவியினுள் உட்புகுவதை தடுத்து மண்ணரிப்பு ஏற்படுவதை தடுத்து வாவியை பாதுகாக்கும் நடவடிக்கைகளை வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊடாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

இத்திட்டத்திற்கமைய மட்டக்களப்பு வாவியோரம் சுமார் ஒன்றரை மீட்டருக்கும் இரண்டு மீட்டருக்கும் இடையேயான உயரமான தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

மட்டக்களப்பு லேடி மெனிங் டிரைவ் வாவியோரத்தில் இத்திட்டத்தின் முதற்கட்டமானது நடைமுறைப்படுத்தப்படுகிறது . இதற்கென 58 மீட்டர் நீளமான தடுப்புச் சுவர் சுமார் 4 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வருவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் தெரிவித்தார்

ஆரம்பத்தில் இத்திட்டம் நாலு மில்லியன் செலவில் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் தொடர்ந்தும் மட்டக்களப்பு வாவியோரத்தில் இவ்வாறான தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 713942

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time