உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

மட்டு மாநகர சபையின் முதல்வராக; சிவம் பாக்கியநாதன் தெரிவு – தமிழரசுக் கட்சி ஆட்சி.!!!

மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வராக ஊடகவியலாளர் சிவம் பாக்கியநாதன், அவர்களும் பிரதி முதல்வராக வைரமுத்து தினேஸ்குமார் அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

மட்டு மாநகர சபை முதல்வர் தெரிவானது கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ALM.அஸ்மி அவர்களின் தலைமையில் மாநகர சபை சபா மண்டபத்தில் இன்று (11) காலை இடம்பெற்றது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த சிவம் பாக்கியநாதன் அவர்களை அதே கட்சியை சேர்ந்த மாசிலாமணி சண்முகலிங்கம் அவர்கள் முன்மொழிய ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த நவரெத்தினராசா ரகுபரன் அவர்கள் வழிமொழிய வேறு தெரிவுகள் இன்மையால் அவர் அனைவராலும் ஏகமனதாக மட்டு மாநகரசபை முதல்வராக தெரிவு செய்யப்பட்டார்.

அத்தோடு பிரதி முதல்வராக கௌரவ வைரமுத்து தினேஸ்குமார் அவர்கள் போட்டிக்கு மத்தியில் 18 வாக்குகளை பெற்று தெரிவு செய்யப்பட்டார்.

போட்டியிட்ட முன்னாள் பிரதி முதல்வர் சீலன் அவர்கள் 4 வாக்குளை மாத்திரம் பெற்றார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 714059

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time