உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 25, 2026

Hot News

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட 60 வேட்பாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்.!!!

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 60 வேட்பாளர்களுக்கு எதிராக தற்போது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் எஸ்.சுபியான் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று (9) இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பங்கேற்கும் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல்களில் தேர்தல் சட்டங்களை பின்பற்றி கட்டுப்பணம் மற்றும் வேட்புமனுத் தாக்கல் என்பவற்றை உரிய நேரத்திற்கு முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேர்தல் திணைக்களத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம் அமைதியான தேர்தலை நடத்தி முடிக்க சகல தரப்புக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது தேர்தல் செலவீனங்கள் உரிய முறையில் பின்பற்ற வேண்டும் எனவும் எஸ்.சுபியான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 718901

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time