உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 24, 2026

Hot News

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

தடம்புரண்டது மட்டக்களப்பு புகையிரதம்  – பயணிகள் அவதி; ரயில் சேவைகள் பாதிப்பு.!!!

(ஜே.கே)

மாஹோ இருந்து மட்டக்களப்புக்கு வந்த ரயில் மட்டக்களப்பு ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டதன் காரணமாக ரயில் சேவை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 1.00மணியளவில் மட்டக்களப்பு பிரதான ரயில் நிலையத்திற்கு வருகைதந்த புகையிரதமே இவ்வாறு தடம்புரண்டுள்ளது.

இதன்காரணமாக மட்டக்களப்பு பிரதான புகையிரத நிலையத்திற்கான பயணங்கள் யாவும் தடம்புரண்ட இடத்திற்கு அருகில் இருந்து நடைபெறும் என புகையிரத மட்டக்களப்பு நிலைய பொறுப்பதிகாரி பேரின்பராஜா தெரிவித்தார்.

புகையிரம் தடம் புரண்டுள்ளதன் காரணமாக புகையிரத நிலையத்திற்கு புகையிரதத்தினை கொண்டுவரமுடியாத நிலையேற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாளைய தினம் சேவையினை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

புகையிரதம் தடம்புரண்டதன் காரணமாக அதில் வருகைதந்த பயணிகளும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதுடன் எந்தவித பாதிப்பும் யாருக்கும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 718667

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time