உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

சட்டத்தரணிகள் வாங்கிய சோற்றுப் பார்சலுக்குள் புழுக்கள்: வர்த்தக நிலையத்திலிருந்து பெருமளவு மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் மீட்பு; வர்த்தகர் மீது வழக்கு தாக்கல் – மட்டக்களப்பில் சம்பவம்.!!!

(ஜே.கே)

மட்டக்களப்பு நகரில் சட்டத்தரணிகள் சிலர் பகல் உணவிற்காக பிரபல உணவகம் ஒன்றிலிருந்து கொள்வனவு செய்த உணவு பார்சலுக்குள் புழுக்கள் தென்பட்டதை அடுத்து பொதுச்சுகாதார பரிசோதகர்கள் குறித்த வர்த்தக நிலையத்தை சுற்றிவளைத்தனர்

குறித்த சட்டத்தரணிகளிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து குறித்த வர்த்தக நிலையம் சுற்றி வளைக்கப்பட்டு அங்கிருந்து மனித பாவனைக்கு உதவாத பெருமளவிலான சமைத்த உணவுப் பொருட்கள் பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு புளியந்தீவு பதில் பொது சுகாதார பரிசோதகர் ரி.மிதுன் ராஜ் தெரிவித்தார்

குறித்த உணவு பார்சலை பிரித்து சாப்பிட முற்பட்டபோது அதற்குள் இருந்து புழுக்கள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ் முரளீஸ்வரனின் பணிப்பின் பேரில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் உதயகுமாரின் உத்தரவின் பேரில் குறித்த உணவு விடுதி பொதுச் சுகாதார பரிசோதர்களினால் சோதனையிடப்பட்டது.

அதன்போது மனித பாவனைக்கு உதவாத, பழுதடைந்த, காலாவதியான சமைத்த பெருமளவிலான உணவுப் பொருட்கள் அங்கிருந்து மீட்கப்பட்டதாக பொது சுகாதார பரிசோதர்கள் தெரிவித்தனர்.

குறித்த வர்த்தகர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டதுடன் அங்கிருந்த பெருமளவிலான சமைத்த உணவுப் பொருட்களும் சுகாதார அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டதுடன் குறித்த உணவுப் பொருட்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 714097

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time