உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

மட்டு நகரில் இடம்பெற்ற; தங்கச் சங்கிலி பறிப்பில் – 78 வயது மூதாட்டி படுகாயம்.!!!

மட்டக்களப்பு நகரில் உள்ள நல்லையா வீதியில், 78 வயதுடைய வயோதிப பெண் ஒருவர் தனது வீட்டு முற்றத்தைத் தும்புத் தடியால் கூட்டிக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரது கழுத்தில் இருந்த சுமார் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை அறுத்து எடுத்து, அவரை வீதியில் தள்ளி வீழ்த்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று (24) காலை 6:30 மணியளவில், ஆணைப்பந்தி பிள்ளையார் கோவில் சந்திக்கு அருகிலுள்ள வைரவர் ஆலயத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.

இதில் படுகாயமடைந்த மூதாட்டி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 713967

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time