புகையிரதத்தில் மோதி; 23 வயது இளைஞன் பரிதாப பலி.!!!
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கறுவப்பங்கேணியில் இன்று (08) அதிகாலை புகையிரதத்தில் மோதுண்டு இளைஞன் உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை 1.30 மணிக்கு மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதத்தில் மோதுண்டு கறுவப்பங்கேணி, அரோஸ் வீதியை சேர்ந்த எஸ். நிசாந்தன் என்னும் 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
புகையிரதக் கடவையில் இருந்து தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தவரே இவ்வாறு புகையிரதத்தில் மோதுண்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.