உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

August 19, 2025

Hot News

மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த பேருந்து தங்காலையில் விபத்து; ஒருவர் பலி – பலர் காயம்.!!!

கொழும்பு – வெள்ளவாய பிரதான வீதியில் வெலிஹார பகுதியில், மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லொறியின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (24) அதிகாலை 2.45 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாகவும், இதில் பேருந்தில் பயணித்த 12 பயணிகளும், டிப்பர் லொறியின் ஓட்டுநரும் காயமடைந்து தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பயணி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

உயிரிழந்தவரின் உடல் தங்காலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related News

Total Websites Views

Total Views: 323046

Search

விளம்பரங்கள்