உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

மட்டக்களப்பு வாவியில் பாரியளவில் நீர்த்தாவரங்களால்; முதலைகள் பெருக்கம்! மீனவர்கள் அவதி! மீன்பிடி பாதிப்பு! மீனவர்கள் சிலர் பலி.!!!

(ஜே.கே)

இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய வாவியான மட்டக்களப்பு வாவியில் பெருகிவரும் ஆற்றுவாழை எனப்படும் நீர்த்தாவரங்களால் முதலைகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதுடன் வாவி அழிவடைந்து வருவதுடன் மீனவர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டு வகின்றனர்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் குறித்த வாவியில் மீன்கள் பாடலிசைத்ததால் பாடும்மீன்கள் வாழும் வாவி என குறித்த வாவி சர்வதேச புகழ் பெற்றது.

குறித்த மட்டக்களப்பு வாவியில் சுமார் பதினைந்தாயிரம் மீனவ குடும்பங்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. குறித்த ஆற்றுவாழைப் பெருக்கத்தால் மீனவர்கள் தோணிகளைத் தள்ள முடியாமலும் அவதியுறுவதாகத் தெரிவிக்கின்றனர்.

முதளை, பாம்புகளும் அதனுள் மறைந்திருப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த ஆற்று வாழைகளுக்குள் ஒளிந்திருந்த முதலை மீனவர் ஒருவரை இழுத்துச் சென்று மீனவர் பலியானதுடன் பல கால்நடைகளும் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வாவியினை அழித்துவரும் ஆற்றுவாழைகளை அகற்றித்தருமாறு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 714044

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time