உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

மட்டக்களப்பு தாழங்குடா பகுதியில்; நள்ளிரவில் புகுந்த முதலை.!!!

மட்டக்களப்பு தாழங்குடா முதலாம் குறிச்சி பகுதிக்குள் நேற்று முன்தினம் (02) அதிகாலை 3.00 மணியளவில் மக்கள் குடியிருப்பு பகுதி காணிக்குள் திடீரென புகுந்த முதலையை கண்டு அச்சமடைந்து பக்கத்து வீட்டு உறவினர்களை கூப்பிட்டதனை தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து நள்ளிரவில் கடும் போராட்டத்திற்கு மத்தியில் முதலையை மடக்கி பிடித்து கட்டி வைத்துள்ளனர்.

கடந்த ஓரிரு தினங்களாக பெய்த மழை காரணத்தால் மட்டக்களப்பில் உள்ள வாவிகள் மற்றும் குளங்களில் நீர் நிறைந்து காணப்படுவதனால் அவற்றிலிருந்து முதலைகள் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்குள் உள் நுழையும் நிலை அதிகமாக காணப்படுகின்றது.

கிராம மக்களால் மட்டக்களப்பு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தெரிவித்ததை அடுத்து அவர்களும் வருகை தந்து கட்டி வைத்திருந்த முதலையை கடும் போராட்டத்திற்கு மத்தியில் சிரமப்பட்டு பிடித்து பாதுகாப்பாக மீட்டு மனித நடமாட்டம் அற்ற நீர்நிலையில் முதலையை விடுவித்துள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 714141

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time