உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

கடற்கரையை அழகுபடுத்திய; இலங்கை இராணுவத்தினர்.!!!

(பாறுக் ஷிஹான்)

ஆசியாவின் நான்காவது பெரிய கடற்பாறை அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில், அருகம்பை பகுதியில் அமைந்துள்ளது. நீர் சறுக்கல் உள்ளிட்ட விளையாட்டிற்கு நல்ல சூழல் இருப்பதால், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அருகம்பை விரிகுடா சுற்றுலாப் பகுதியை விரும்புகிறார்கள்.

அடுத்த வாரத்திற்குள் அருகம்பை விரிகுடா சுற்றுலா மண்டலம் திறக்கப்படவுள்ள நிலையில், அருகம்பை விரிகுடாவில் கடற்கரையை சுத்தம் செய்யும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கை இராணுவத்தின் 24வது பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சமிந்த கலப்பத்தியின் வழிநடத்தில் இராணுவ வீரர்கள் அருகம்பை விரிகுடாவில் ஒரு நாள் கடல் சுவரை சுத்தம் செய்யும் பணியைத்தொடங்கினர்.

இதற்காக சுமார் 200 இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அதே நேரத்தில், அருகம்பை சுற்றுலா காவல்துறை பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் பொத்துவில் பிரதேச சபை அதிகாரிகளும் இச்சுத்தம் செய்யும் செயற்பாட்டில் இணைந்திருந்தனர். இது தவிர, தற்போது இங்கு வருகை தரும் பல சுற்றுலாப் பயணிகளும் இந்நிகழ்வில் இணைந்தமை குறிப்பிடத்தக்கது.

24வது படைப்பிரிவின் துணைத்தளபதி பிரிகேடியர் பிரியங்க குலதிலக, 242வது படைப்பிரிவின் தளபதி கேணல் துஷார கேலே கோரலே, 14வது லயன்ஸ் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் சுரேஷ் பெரேரா மற்றும் 24வது படைப்பிரிவின் சிவில் தொடர்பு அதிகாரி கேணல் சிசிர குமார ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 714129

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time