உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

இருநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்டோர்; குருதிக் கொடை வழங்கிய – இரத்ததான முகாம்.!!!

(எம்.பஹத் ஜுனைட்)

காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை (22) புதிய காத்தான்குடி -01 பதுரிய்யா ஜும் ஆ பள்ளிவாயலில் இடம்பெற்றது.

ஜனாஸா நலன்புரி அமைப்பின் தலைவர் எம்.எச்.எஸ்.ஹமீட் தலைமையில் இடம்பெற்ற இவ் இரத்ததான முகாமில் காத்தான்குடி தள வைத்தியசாலை வைத்தியர் திருமதி அலிமா ரஹ்மான், இரத்த வங்கிக்கு பொறுப்பான வைத்தியர் நித்தியாநிந்தி மற்றும் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் , நகர சபை உறுப்பினர்கள், தாதியர்கள், அமைப்பின் உறுப்பினர்கள், இரத்த கொடையாளர்கள் சம்மேளனத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

காத்தான்குடி தள வைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஆகியவற்றின் இரத்த தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் முகாமில் ஆண்கள்,பெண்கள் என சுமார் இருநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட இரத்த கொடையாளர் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 714036

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time