எல்ல – வெல்லவாய பேரூந்து விபத்தில்; உயிரிழந்தோர் 15 ஆக உயர்வு – 18 பேர் காயம்.!!!
எல்ல – வெல்லவாய வீதியில் 24வது மைல்கல் அருகே நேற்று (04) இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 15 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்களில் 9 பெண்களும் 6 ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
11 ஆண்களும் 7 பெண்களும் காயமடைந்துள்ளனர். இவர்களில் 05 குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுலா சென்று திரும்பிய குழுவினரை ஏற்றிச் சென்ற பேருந்து சுமார் 200 மீட்டர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததால் இவ்விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் கூறினர்.
இந்த பேருந்து தங்காலை நகரசபை பணியாளர்கள் குழுவை ஏற்றிச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது.
விபத்தில் சிக்கியவர்களை மீட்க பொலிஸார், இராணுவம், விமானப்படை, தீயணைப்பு திணைக்களம் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
பேருந்து விபத்து நடந்த நேரத்தில் அதில் 30க்கும் மேற்பட்டோர் இருந்ததாகவும், மோசமான நிலைமைகள் காரணமாக மீட்பு பணிகள் கடுமையான சிரமங்களுடன் நடைபெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



