தங்காலை நகர சபை ஊழியர்கள் பயணித்த பஸ்; 300-400 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.!!!
தங்காலை நகரசபை ஊழியர்கள் குழு பயணித்த பஸ், வெல்லவாய–எல்ல வீதியில் சுமார் 300–400 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
பஸ்ஸில் 30 பேருக்கும் மேற்பட்டோர் பயணித்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் சிக்கியவர்களை மீட்க இராணுவத்தினர், காவல்துறை மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை 06 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன், 02 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பதுளை, தியத்தலாவ, வெல்லவாய மற்றும் பண்டாரவெல வைத்தியசாலைகள் அவசர சிகிச்சைக்காக முன்னெச்சரிக்கையாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், விபத்து இடம்பெற்ற பகுதியில் வாகன நெரிசல் அதிகமாக உள்ளதால், பொதுமக்கள் பார்வையிட வராமல் இருக்கும்படி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

