கிழக்கு மாகாணத்தில் பிரபல சுற்றுலா தளமான காத்தான்குடி கடற்கரையை தூய்மைப்படுத்தும் கிளீன் சிறீலங்கா வேலைத்திட்டம் -நகரசபை, பொலிசார், படையினர்,அரச அதிகாரிகள் பங்கேற்பு.!!!
(ஜே.கே)
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் சிந்தனையில் உதித்த அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டமான கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் கடற்கரை பிதேசங்களை தூய்மைப்படுத்தும் பாரிய நடவடிக்கைகள் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டன
பிரதான நிகழ்வுகளில் ஒன்றாக கிழக்கு மாகாணத்தில் அதிகளவிலான உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகைதரும் காத்தான்குடி கடற்கரை பிரதேசம் காத்தான்குடி நகரசபையின் உதவியுடன் இன்றைய தினம் பாரிய சிரமதான பணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
நகரசபை, பொலிஸ் திணைக்களம், படையினர், பிரதேச செயலகம், தொண்டு நிறுவனங்கள்,அரச அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
கடற்கரை வீதி, கடற்கரை சூழல், மக்கள் ஓய்வெடுக்கும் இடங்களில் இந்த சிரமதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட ன
இதன்போது பொலித்தீன் கழிவுகள், வீதியோரங்களில் வீசப்பட்ட கழிவுகள் அற்றப்பட்டதுடன் வடிகான்களும் தூய்மைப்படுத்தப்பட்டன.









