உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்; பள்ளிவாசல் வளாகத்தில் மாபெரும் சிரமதான நிகழ்வு.!!!

(எஸ்.அஷ்ரப்கான்)

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ், சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் தோட்ட வளாகத்தில் மாபெரும் சிரமதான நிகழ்வொன்றை இன்று (03) சனிக்கிழமை காலை 06.00 மணி முதல் மேற்கொண்டது.

ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் தோட்டப் பராமரிப்புக் குழுத் தலைவரும் உதவிச் செயலாளருமான எஸார் மீராசாஹிபின் ஒருங்கிணைப்பில்

சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில், அதன் தலைவர் டாக்டர் எம்.எச்.சனூஸ் காரியப்பர் தலைமையில், இச்சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.

நம்பிக்கையாளர் சபையின் செயலாளர் பொறியியலாளர் எம்.எம்.முஹம்மட் முனாஸ், பொருளாளர் தொழிலதிபர் ஏ.எல்.எம்.முஸ்தபா, பிரதித் தலைவர் தொழிலதிபர் எம்.எம்.எம்.முபாரக், உதவித் தலைவர் மௌலவி எம்.எம்.எம்.சலீம் (ஷர்க்கி), உதவிச் செயலாளர் ஏ. பர்ஹாம், உதவிப் பொருளாளர் ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் எம்.நஜீம் உட்பட நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், தோட்ட பராமரிப்புக் குழுவின் முன்னணி செயற்பாட்டாளர்களான ஏ. ஜெஸ்மீர், எம்.ஐ. நஜீம் உட்பட தோட்டப் பராமரிப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் மஹல்லாவாசிகள், ஜமாஅத்தினர், பிரதேச பொது அமைப்புகள் மற்றும் சங்கங்களின் உறுப்பினர்கள் எனப் பலரும் இச்சிரமதான நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 714144

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time