உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

மூத்த ஊடகவியலாளர் சலீம் மறைவுக்கு – சிலோன் மீடியா போரம் ஆழ்ந்த அனுதாபம்.!!! 

-பாறுக் ஷிஹான்-

சலீம் எனும் ஊடக ஜாம்பவானை இழந்து நிற்கும் ஊடக சமூகம், அவரின் மறைவு செய்தி எங்களை ஆழ்ந்த கவலையிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது என சிலோன் மீடியா போரம் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளது.

மேலும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளானது,

அம்பாறை மாவட்டம் நிந்தவூரை பிறப்பிடமாகக் கொண்ட பிரபல மூத்த ஊடகவியலாளர், கலாபூஷணம் ஏ. எல்.எம். சலீம், ஊடகத் துறையில் நீண்ட காலம் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய முன்னணி மூத்த ஊடகவியலாளராக திகழ்ந்தவர்.

அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் பிரதித் தலைவராகப் பணியாற்றியதுடன், மாவட்ட மற்றும் கிழக்கிலங்கை மட்டங்களில் பல ஊடக அமைப்புகளை உருவாக்கி வளர்த்ததில் அவர் ஆற்றிய பங்களிப்பு மறக்க முடியாதது.

மேலும், அம்பாறை மாவட்ட கரையோர செய்தியாளர் சங்கம், தென்கிழக்கு இலங்கை செய்தியாளர் சங்கம் ஆகியவற்றின் ஸ்தாபகராகவும், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் மற்றும் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் முன்னாள் உப தலைவராகவும் இருந்து ஊடகத் துறையின் வளர்ச்சிக்கு சிறப்பான சேவைகளை வழங்கியுள்ளார்.

அவரது பணிவும், நேர்மையும், இளம் ஊடகவியலாளர்களை வழிநடத்திய அர்ப்பணிப்பும் என்றும் நினைவுகூரப்படும்.

இவரது இழப்பினால் துயரத்தில் உள்ள அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஊடகவியலாளர் சமூகத்தினருக்கும் சிலோன் மீடியா போரம் சார்பில் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அல்லாஹ் அன்னாரது பிழைகளை மன்னித்து, அவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக!

அவரது குடும்பத்தினருக்கு அமைதியும் பொறுமையும் அளிப்பானாக என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 719531

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time