உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

காத்தான்குடி மாணவன் முகம்மது ஜனூஸ் ஆரிஸ் சர்வதேச கணித ஒலிம்பியாடில் சாதனை – பாடசாலையில் சிறப்பு கௌரவிப்பு.!!!

சர்வதேச கணித தினம் மற்றும் உலக சிசுக்கள் தினத்தை முன்னிட்டு நாட்டில் பல சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இதனையொட்டி, கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சகம் கடந்த 16 அன்று இலங்கையின் கணித மேதைகள் மாணவர்களை வரவேற்று கௌரவித்தது. மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டு, அவர்கள் பெற்ற சாதனைகளை பாராட்டினர்.

இதில் காத்தான்குடியைச் சேர்ந்த மட்டக்களப்பின் மெதடிஸ்த மத்திய கல்லூரி, 9ம் வகுப்பு மாணவன் முஹம்மது ஜநூஸ் ஆரிஸ் சிறப்பாக கௌரவிக்கப்பட்டார். கடந்த 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிகளில் இலங்கை சார்பாக கலந்துகொண்டு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வென்ற எம்.ஜே. ஆரிஸ், தனது நாட்டுக்கும், பாடசாலைக்கும், மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இந்த மாணவரை கௌரவிக்கும் வகையில் பாடசாலையின் தலைமை ஆசிரியர் ஆர். பாஸ்கர் தலைமையில், அவரின் பயிற்றுவிப்பில் உள்ள ஆசிரியர் மகாதேவன் மற்றும் மாணவனின் பெற்றோர்கள் கலந்து கொண்ட சிறப்பு விழா, பாடசாலை பாண்ட் அணிவகுப்பு மரியாதை பேரணியுடன் நடத்தப்பட்டது.

சர்வதேச கணித தினத்தின் சிறப்புக் காலத்தில், எம்.ஜே. ஆரிஸுக்கு பாடசாலை, ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் முன்னிலையில் சிறப்புப் பாராட்டு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு, அவரின் சாதனை பாடசாலையின் வரலாற்றில் நினைவுகூரத்தக்க தருணமாக பதிவு செய்யப்பட்டது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 810993

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time