உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

ஆசிரியர் பரீட்சைக்குத் தோற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இணக்கம் – சபையில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க.!!!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் பின்னர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரியர் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அனைவரும் ஆசிரியர் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும், அவ்வாறு பரீட்சைக்குத் தோற்றும் உத்தியோகத்தர்களில் பெரும்பாலானோரை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற இலங்கை தொலைதொடர்புகள் சட்டத்தின் கீழான கட்டளைகள் தொடர்பான விவாதத்தின் போது உரையாற்றுகையில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

அபிவிருத்தி உத்தியோகத்தர்களில் சுமார் 52,000 பேர் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான தகுதியைக் கொண்டுள்ளதாகவும், ஆசிரிய சேவை யாப்புக்கு இணங்க தகுதி பெறுவோர் ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பில், சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் போது இத்திட்டத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், பரீட்சைக்கு தோற்றாதவர்களுக்காக மாற்றுத் திட்டம் ஒன்றை பரிசீலிக்க முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தமது ஆட்சியில் ஆசிரியர் தொழில் வழங்குவதாக உறுதிப்படுத்த இரத்தத்தில் கையொப்பமிடுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சென்றதாகவும், அந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவரை பாதுகாத்தமைக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அமைச்சர் கூறினார்.

இந்த விவகாரத்தை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்த பலரும் முயற்சித்ததாக சுட்டிக்காட்டிய அமைச்சர், சட்டம் மற்றும் தரநிர்ணயத்தின் அடிப்படையில் நாட்டை முன்னேற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.

அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடிதங்களின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதி வழங்கும் பழைய நடைமுறை தொடர்ந்தால் நாடு முன்னேற முடியாது எனக் குறிப்பிட்ட அவர், தற்போதைய அரசாங்கத்தில் அவ்வாறான கடிதங்கள் வழங்கப்படுவதில்லை என்றும் கூறினார்.

நாட்டில் சிறந்த அரச சேவையை உருவாக்கி, அசுத்தமான அரசியல் யுகத்தை ஒழித்துள்ளதாகவும், மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையில் அரசாங்கம் செயல்பட்டு வருவதாகவும், நாடாளுமன்றத்தை மேலும் பலப்படுத்துவதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 703751

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time