ஹிஸ்புல்லாஹ்வை; நேருக்கு நேர் சந்திக்க நான் தயார் – பிர்தெளஸ் நழீமி.!!!
(எம் எஸ் எம் நூர்தீன்)
புதன்கிழமை (16) இரவு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் நான் முதலும் இப்போதும் பல அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்கு தடையாக இருந்ததாக மிகப் பெரிய அபாண்டத்தை சுமத்தியுள்ளார்.
இது தொடர்பிலும் இன்னும் பல விடயங்கள் தொடர்பாகவும் ஊடகங்களுக்கு முன்பாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் அவர்களை நேருக்கு நேர் சந்திக்க நான் ஆயத்தமாக உள்ளேன்.
சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் தயாரா.?
இருவரும் ஒன்றாக கலந்து கொள்ளும் ஊடகவியலாளர் சந்திப்புக்கு வருமாறு சகோதரர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு அழைப்பு விடுக்கிறேன்
ஏற்கனவேயும் பல மேடைகளிலும் ஊடக சந்திப்புக்களிலும் சகோதரர் ஹிஸ்புல்லாஹ்வை நேருக்கு நேர் பேச அழைத்தும் வர வில்லை.
ஊடகங்கள் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
புதன்கிழமை (16) இரவு சகோதரர் ஹிஸ்புல்லாஹ் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் என்னைப் பற்றி தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பாக மிக விரைவில் ஊடகவியலாளர்களை சந்திப்பேன் எனவும் தெரிவித்தார் .