சீரற்ற வானிலை காரணமாக: நாடு முழுவதும் 206 வீதிகள்-10 பாலங்கள் சேதம்.!!!
சீரற்ற வானிலை மற்றும் அதிக மழை காரணமாக நாடு முழுவதும் வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர் நாயகம், விமல் கண்டம்பி தெரிவித்தார். இதனால் பல வீதிகள் மற்றும் பாலங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
அவர் கூறியதாவது:பிரதான வீதிகள் உட்பட நாடு முழுவதும் 206 வீதிகள் தடைப்பட்டுள்ளன.10 பாலங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது, இதனால் முக்கிய நகரங்களுக்கான நுழைவு மற்றும் வெளியேறும் வீதிகள் முற்றிலும் தடைப்பட்டுள்ளன.
குறிப்பாக, நுவரெலியா மற்றும் அனுராதபுரம் நகரங்களுக்கு செல்லும் அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் வீதிகள் தற்போது தடைசெய்யப்பட்டுள்ளன.
அத்துடன், அவர் பொதுமக்களுக்கு பாதுகாப்பான இடங்களில் தங்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறும், அரசாங்கம் மற்றும் உள்ளூர் அமைப்புகள் மீட்பு பணிகளை விரைவில் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.