கிழக்கில் நிலவும் அதிக வெப்பம்; பனை நுங்கு அருந்தி உஷ்ணம் தீர்க்கும் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும்.!!!
(ஜே.கே)
கிழக்கு மாகாணத்தில் தற்போது அதிக வெப்பமான காலநிலை நிலவி வருகிறது. உஷ்ணம் காரணமாக பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
அதிக உஷ்ணம் காரணமாக குளிரான பானங்களையும், நீரையும் அருந்துவதில் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பனையில் இருந்து கிடைக்கின்ற நுங்கு அருந்துவதில் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டுவதை அவதானிக்க முடிகின்றது
மட்டக்களப்பு கல்முனை, மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலைகளில் பாதை ஓரத்தில் அதிகளவிலான இடங்களில் நுங்கு விற்பனை செய்யப்படுகிறது. அப்பாதையினால் பயணிக்கும் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவிலானோர் நுங்கு அருந்தி உஷ்ணத்தை தணிப்பதை காண முடிகின்றது
குறித்த நெடுஞ்சாலையில் வாகனங்களில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி தமது உஷ்ணத்தை தணிப்பதற்காக நுங்கு அருந்துவதை காணமுடிகிறது.
இதனால் அப்பிரதேசத்திலுள்ள சாதாரண வியாபாரிகள் நன்மை அடைந்து வருவதுடன் வருமானத்தையும் பெற்று வருகின்றனர்.





