உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக; கடமையை பொறுப்பேற்றார் – திஸாநாயக்க.!!!

கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு, சமூக நலன்புரிச் சேவைகள், கிராமிய மின்சார அமைச்சின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவை விசேட தர அதிகாரி எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ. திஸாநாயக்க கடமையை பொறுப்பேற்றுள்ளார்.

குறித்த பதவியேற்பானது, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவினால் 17ஆம் திகதி வழங்கப்பட்ட கடிதத்தின்படி, நேற்று(18) இடம்பெற்றுள்ளது.

இலங்கை நிர்வாக சேவையின் மூத்த அதிகாரியான இவர், கிழக்கு மாகாண விவசாய நீர்ப்பாசன, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, மீன்பிடி, கூட்டுறவு அபிவிருத்தி உணவு வழங்கலும் விநியோகத்திற்குமான அமைச்சின் செயலாளராக பதவி வகித்த நிலைமையிலேயே இவ்வாறு பதவிக்கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவர் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு திணைக்களங்கள், பிரதிப் பிரதம செயலாளர் மற்றும் பல அமைச்சுக்களின் செயலாளர் பதவிகளில் வினைத்திறன் மிக்க அதிகாரியாகவும், சிறந்த வழிகாட்டுதல்கள், நிர்வாக மற்றும் முகாமைத்துவ செயற்பாட்டு திறமைகள் என்பவற்றைக் கருத்திற்கொண்டே இவ்வாறு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இந்த நிகழ்வில் அமைச்சின் உதவிச் செயலாளர் எஸ். கரன், சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்தியர் எம்.ஏ. நபீல், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்கள மாகாண ஆணையாளர் திருமதி றிஸ்வானி றிபாஸ் அமைச்சின் நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.எம். றியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 714044

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time