உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

கிழக்கு முதலமைச்சர் வேட்பாளராக அதாஉல்லா; மு.கா – தே.கா இணைந்து பொது அணி; ஹக்கீம் பச்சைக் கொடி.!!!

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவை களமிறக்க மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் பச்சைக் கொடி காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வாரம் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாகவும்

இச்சந்திப்பில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் பொதுச் சின்னத்தில் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவை முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கான முஸ்தீபுகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ் எம்.எம். முஷாரப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைவது குறித்து பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 714096

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time