கிழக்கில் அமைதியான முறையில் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்; மட்டக்களப்பில் 11554 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி.!!!
(ஜே.கே)
உள்ளூராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று காலை முதல் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பமமாகி சகல அரச நிறுவனங்களிலும் இடம் பெற்று வருகின்றன.
இம்மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்பு க்காக 11 554 பேர் தகுதி பெற்றுள்ளனர்.கல்குடா, மட்டக்களப்பு , பட்டிருப்பு ஆகிய தேர்தல் தொகுதியிகளில் வாக்களிப்பு இடம்பெறுகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி சபைகளில் இருந்து பட்டியல் வேட்பாளர்களுடன் சேர்த்து 274 பேர் தெரிவு செய்யப்பட உள்ளனர்
இன்று காலை 7 மணிமுதல் அனைத்து அரசு அலுவலகங்கள் போலீஸ் நிலையங்கள் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறுகின்றன.ஆறாயிரத்துக்கு மேற்பட்ட அரச ஊழியர்கள் தேர்தல் கடமைகளுக்காக அமர்த்தப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் 447 வாக்களிப்பு நிலையங்களில் கிடைக்கப் பெறுகின்ற வாக்குகள் 144 வட்டார தேர்தல் வாக்கு என்னும் நிலையங்களுக்கு கொண்டுவரப்பட்டு என்னும் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளன
தபால் மூல வாக்கு எண்ணும் பணிகளுடன் இணைந்ததாக இறுதி தேர்தல் முடிவு வட்டார தேர்தல் எண்ணும் நிலையத்தில் இருந்து வெளியிடப்படும் என மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தரணி எம்.பி.எம்.சுபியான் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்




