கிழக்கு மாகாண விளையாட்டு அமைச்சின் ஊடாக; காத்தான்குடி பொது மைதான அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு.!!!
விளையாட்டுத்துறை முன்னேற்றம் மற்றும் தேக ஆரோக்கியமுள்ள சமூகத்தை உருவாக்கும் நோக்கில் கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த பல விளையாட்டு மைதானங்களின் அபிவிருத்திக்காக கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்பின் பேரில் விளையாட்டு திணைக்களத்தின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
அதற்கிணங்க கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்பு செயலாளர் UHM அப்துல்லா மற்றும் காத்தான்குடி தேசிய மக்கள் சக்தி குழுவின் கோரிக்கையின் மூலம் காத்தான்குடி பொது விளையாட்டு மைதான அவசர அபிவிருத்தி வேலைகளுக்காக ரூபா 1850,000 (1.85 M) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
இந் நிதியின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ள வேலை திட்டங்கள் தொடர்பாக 22.05.2025 திகதி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
இதில் கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் UHM அப்துல்லா காத்தான்குடி நகர சபை செயலாளர் திருமதி ரிப்கா சபீன் மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் MY.ஆதம் தேசிய மக்கள் சக்தி காத்தான்குடி அமைப்பாளர் MM நசீர் மற்றும் காத்தாங்குடி கால்பந்தாட்ட லீகின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்
இம் மைதானத்தின் அபிவிருத்திக்கு தேவைப்படும் மேலதிக நிதியினையும் எதிர்காலத்தில் பெற்றுத் தருவதாக இணைப்பு செயலாளர் அவர்களினால் தெரிவிக்கப்பட்டது


