கல்வியில் சிறந்த அடைவுகளை பெற்று; சாதனை படைத்த மாணவர்களுக்கு – காத்தான்குடியில் கெளரவிப்பு.!!!
(எம்.பஹத் ஜுனைட்)
KCCian 85/88 பழைய மாணவர்களினால் வருடந்தோறும் நடாத்தப்பட்டுவரும் தங்களது வகுப்பு நண்பர்களுடைய பிள்ளைகள் 2024 ம் வருடத்தில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்திலும்,தேசிய மட்டத்திலும், சிறந்த பெறுபேற்றைப் பெற்று பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு நேற்று (23) மூன் வெளி தனியார் உணவகத்தில் இடம்பெற்றது.
KCCian 85/88 இன் தலைவர் எஸ்.ஏ.கே.பலீலுர் ரஹ்மான் தலைமையில் இடம்பெற்ற மூன்றாவது வருட கெளரவிப்பு நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி எச்.எம்.முஹம்மட் பஸில் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் மஹ்ததுஸ் ஸுன்னா மகளிர் அரபுக் கல்லூரி கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேய்க் எம்.எம்.எம்.மன்சூர் (மதனி) , காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.நூர்தீன் ஆகியோர் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் மருத்துவம், வர்த்தகம், கலை போன்ற துறைகளில் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் கெளரவிக்கப்பட்டதுடன் பரீட்சைக்கு தோற்றி சிறந்த பெறுபேற்றைப்பெற்ற மாணவர்களும் கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது















