உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

August 12, 2025

Hot News

காட்டு யானை தாக்கி; 4 பிள்ளைகளின் தந்தை பரிதாப பலி.!!!

(ஜே.கே)

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி நெல்லிக்காட்டில் இன்று (02) அதிகாலை 1.30மணிக்கு யானை தாக்கி 4பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு நெல்லிக்காட்டு கிராமத்திற்குள் புகுந்த யானை வீட்டின் முன்பகுதியில் வைத்து மாணிக்கம் இராமலிங்கம் என்பவரை தாக்கியுள்ளது.

சம்பவ இடத்திற்கு அதிகாலை சென்ற போரதீவுப்பற்று பிரதேசசபையின் உப தவிசாளர் த.கயசீலன் படுகாயமடைந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் பணியை முன்னெடுத்திருந்தார்.

இதன்போது யானையின் தாக்குதல் காரணமாக படுகாயமடைந்தவரை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோதும் அவர் உயிரிழந்துள்ளார்.

இதன்போது உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் வெல்லாவெளி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related News

Total Websites Views

Total Views: 310884

Search

விளம்பரங்கள்