உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

August 12, 2025

Hot News

யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு; மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி.!!!

யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் இன்று (23) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் மூதூர் – மல்லிகைத்தீவச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான தம்பிராசா வர்ணகுலரெட்ணம் (வயது 47) என்பவரே உயிரிழந்துள்ளதுடன், தோப்பூர் – நாராயணபுரத்தைச் சேர்ந்த யோகராசா (வயது 46) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

சேருநுவர பொலிஸ் பிரிவில் உள்ள மாங்குளம் என்ற பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டுவிட்டு தங்களுடைய வீட்டுக்கு திரும்புகையிலேயே யானை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவரின் சடலம் சேருவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டு மூதூர் நீதிமன்ற நீதிபதி திருமதி.தஸ்னீம் பௌசான் காலை சடலத்தை பார்வையிட்டதுடன் உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் படுகாயமடைந்தவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

Total Websites Views

Total Views: 310532

Search

விளம்பரங்கள்