உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

கோறளைப்பற்று மத்தி, தெற்கு எல்லை நிர்ணயப் பிரச்சினை; சட்டத்தரணி ஹபீப் றிபான் தலைமையிலான குழு – பிரதேச செயலகங்களுக்கு விஜயம்.!!!

(எம்.ரீ.எம்.பாரிஸ்)

கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை மற்றும் கோறளைப்பற்று தெற்கு-கிரான் எல்லை நிர்ணயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தம் பக்க நியாத்துவமான பதில்களை வழங்கும் நோக்கில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத்தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி ஹபீப் றிபான் தலைமையிலான குழுவினர் ஓட்டமாவடி, வாழைச்சேனை பிரதேச செயலகங்களுக்கு இன்று (07) விஜயம் செய்தனர்.

இதன் போது, குறிந்த பிரதேச செயலகங்களின் இரு பிரதேச செயலாளர்களையும் சந்தித்த குழுவினர் மிக நீண்டகாலமாக நிலவி வரும் எல்லை நிர்ணயம் மற்றும் காணி தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கு மாவட்ட அரசாங்க அதிபரினால் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் தமது கடுமையான ஆட்சேபனைகளைத் தெரிவித்துள்ளனர்.

இச்சந்திப்பின் போது கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் எம்.எச்.பைறூஸ், பிரதித்தவிசாளர் ஏ.எச்.நுபையிர்,

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினர் எம்.ஐ.ஹாமீத் மெளலவி, பிரதேச சபையின் உறுப்பினர்களான ஐ.எம்.றிஸ்வி, கோறளைப்பற்று பிரதேச சபை, வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எல்.ஏ.கபூர், ஐ.எம்.இம்தியாஸ், எம்.எல்.அனஸ், ரீ.எல்.சித்தீக் உள்ளிட்ட முக்கிய கட்சியின் செயற்பாட்டார்கள் சிவில் சமூகப்பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இவ்விடயம் தொடர்பில் ஸ்ரீnலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித்தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் என உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக அக்கட்சியின் உயர்பீட உறுப்பினரும், அமைப்பாளருமான சட்டத்தரணி ஹபீப் றிபான் தெரிவித்தார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 714001

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time