உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

ஏறாவூர் இனப்படுகொலையின்; 35ஆவது ஆண்டு நினைவு தினம் – உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு.!!!

(எம்.ரி.எம்.யூனுஸ்)

ஏறாவூரில் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க பயங்கரவாதிகளினால் வெட்டியும், சுட்டும், கடத்தப்பட்டும் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் 35 வது வருட நினைவு தினம் இன்று (12) நூருஸ்ஸலாம் பள்ளிவாயலில் ஷூஹதாக்கள் ஞாபகார்த்த பேரவையின் ஸ்தாபகத் தலைவர் எம்.எல் அப்துல் லத்தீப் தலைமையில் நடைபெற்றது.

வர்த்தக நிலையங்கள், பொதுச்சந்தைகள், பொது நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. நகரின் பல இடங்களில் வெள்ளைக் கொடிகள் போடப்பட்டு துக்க தினமாகவும் அனுஷ்டிக்கப்படுகின்றது.

கடந்த 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி இரவு ஏறாவூர் மற்றும் அதனை சூழவுள்ள கிராமங்களில் 121 முஸ்லிம்கள் தமிழீழ விடுதலை புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களின் ஞாபகார்த்தமாகவே ஷூஹதாக்கள் நினைவு தினம் வருடாந்தம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

ஏறாவூர் ஷூஹதாக்கள் ஞாபகார்த்த பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஷூஹதாக்கள் நினைவு தின அனுஷ்டான நிகழ்வில் விஷேட துஆ பிரார்த்தனையும், சமய நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.

ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ் எச் எம் முஸம்மில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா, ஏறாவூர் நகர சபை தவிசாளர் எஸ் எம் நழீம், நகர சபை செயலாளர் எம் எச் எம் ஹமீம் உட்பட ஷூஹதாக்களின் குடும்ப உறவினர்கள், ஊர்ப்பிரமுகர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 713931

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time