ஏறாவூர் நகர சபை தவிசாளரின் வேண்டுகோளை ஏற்றார்; கிழக்கு மாகாண ஆளுநர்.!!!
ஏறாவூர் நகர சபைக்கு சொந்தமான வாகனம் ஒன்று கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தின் கீழ் கொண்டு செல்லப்பட்டு உள்ளதால் சபையின் தேவை கருதி அதனை மீள வழங்கி வைக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ரட்னலால் ஜெயசேகரவிடம் ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் அல்ஹாஜ் நழீம் வேண்டிக்கொண்டதைத் தொடர்ந்து குறித்த வாகனத்தை உடனடியாக விடுவித்து நகர சபையிடம் கையளிக்கும் படி உரிய அதிகாரிகளுக்கு ஆளுநர் பணிப்புரை வழங்கி உள்ளார்.
நகர சபையின் புதிய தவிசாளராக அல்ஹாஜ் நழீம் தெரிவு செய்யப்பட்ட பின் சபையின் நிதி நிர்வாக விடயங்களில் மக்கள் நலன் காக்க அதீத கரிசனை காட்டும் அதே வேளை வெளியில் உள்ள சபைக்கு உரித்தான அசையும் , அசையா சொத்துக்களை, அறவீடு செய்ய வேண்டிய நிதி நிலுவைகளைக் கண்டறிந்து அவற்றை மீள சபைக்கு உரித்தாக்கும் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்து அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தவிசாளரின் முயற்சியில் திருகோணமலையில் இருந்த குறித்த வாகனம் ஏறாவூர் நகர சபையின் பாவனைக்கு விரைவில் கிடைக்கப்பெற உள்ளது.