உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 15, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

எரிபொருள் பாரவூர்தி விபத்து; கசிந்த டீசலை அள்ளிச் சென்ற மக்கள்.!!!

கிளிநொச்சி, இயக்கச்சிப் பகுதியில் இன்று (26) அதிகாலை இடம்பெற்ற எரிபொருள் பாரவூர்தி விபத்தில், பாரவூர்தியில் இருந்து கசிந்த டீசலை பொதுமக்கள் அள்ளிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்டுநாயக்கவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி எரிபொருள் ஏற்றிச் சென்ற பாரவூர்தியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. வேகக் கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி, வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தினால் பாரவூர்தியின் எரிபொருள் தாங்கியில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக டீசல் பெருமளவில் வீதியில் கசியத் தொடங்கியது. இதை அறிந்த அப்பகுதி மக்கள், பாத்திரங்கள் மற்றும் பக்கெட்டுகளுடன் வந்து கசிந்த டீசலை அள்ளிச் சென்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்து மக்களை அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர்.

விபத்தில் பாரவூர்தியின் சாரதி மற்றும் உதவியாளர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 703355

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time