உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 15, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

மட்டக்களப்பு கல்லடி பாலம் குறித்து ; ஐரோப்பிய தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வு.!!!

வெள்ள சேத மதிப்பீடு – நவீன உபகரணங்களுடன் பகுப்பாய்வு

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)

மட்டக்களப்பு கல்லடி பாலம் தொடர்பான தொழில்நுட்ப ஆய்வுகள் இன்று (17) ஐரோப்பிய தொழில்நுட்ப நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்டன.

நாடளாவிய ரீதியில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பிரதான பாலங்களை ஆய்வு செய்வதற்காக, நப்லஸ் பல்கலைக்கழக பேராசிரியர் லூயி டி சார்நோ தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய தொழில்நுட்ப நிபுணர் குழு இந்த ஆய்வுகளை மேற்கொண்டது.

இந்த ஆய்வின் போது, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய உபகரணங்களை பயன்படுத்தி பாலத்தின் கட்டமைப்பு நிலை குறித்து விரிவான பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்டதுடன், எதிர்கால பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் உதவிகளை வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், இத்தாலி நாட்டைச் சேர்ந்த பிரான்சிஸ்கோ ஜீஒரியானோ, பௌலோ புற்றிநோ, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர் ஏ. எம். சி. ரி. அத்தநாயக்க, பிரதம பொறியியலாளர் எஸ். கலாதரன், கிழக்கு மாகாண பாலங்கள் பராமரிப்பு மற்றும் நிர்வாக பொறியியலாளர் எம். ஏ. வாதுலன்,
கிழக்கு மாகாண பாலங்கள் வடிவமைப்பு பொறியியலாளர் கே. வில்வராசன்,
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பாலங்கள் பராமரிப்பு நிர்வாக பொறியாளர் ரீ. ராமச்சந்திரன்,
மாவட்ட அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர் எம். சுரேஸ்குமார் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வின் அறிக்கை எதிர்வரும் நாட்களில் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும், அதன் அடிப்படையில் தேவையான மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 702969

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time